R.Tharaniya / 2025 நவம்பர் 02 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய ஆதம்பாவா அஸ்வர் வகித்து வந்த நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக நிந்தவூர் பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2025.10.31 அன்று பிரகடனப்படுத்தியுள்ளார்.
இது குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கான பிரகடனத்தில் நிந்தவூர் பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் ஒக்டோபர் மாதம் 24ம் திகதி ஒப்பமிட்டு வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பைரூஸ் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய அவர் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி பிரதேச சபையின்) உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் நாகலிங்கம் ரேகன் 2025.10.31 அன்று பிரகடனப்படுத்தியுள்ளார்.
இது குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கான பிரகடனத்தில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் 10 மாதம் 24ம் திகதி ஒப்பமிட்டு வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நூருல் ஹுதா உமர்/எம்.எஸ்.எம்.ஹனீபா
10 minute ago
26 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago
56 minute ago