Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 03 , பி.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிரந்தர அமைச்சரவையை நியமிப்பதற்கு இன்னும் கால தாமதமாகும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமர்ப்பித்துள்ள பெயர்ப் பட்டியலில் உள்ள சிலருக்கு எதிரான ஆட்சேபனைகள், அமைச்சரவை நியமனத்தை தாமதமாக்குவதாக அறியமுடிகிறது.
எதுஎவ்வாறாயினும் , திங்கட்கிழமையன்று (05) இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் இடம்பெறும் என்றும் சுமார் 35 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராஜாங்க அமைச்சுப் பதவிகளுக்காக பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட எம்.பிக்களின் பட்டியலை ஜனாதிபதியிடம் அக்கட்சி சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .