2025 ஜூலை 05, சனிக்கிழமை

'நீதிமன்றத்தின் உத்தரவால் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்'

Editorial   / 2018 டிசெம்பர் 04 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுடன் புதிய அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே நாமல் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியால் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்தப்பட்ட சேதத்தை சரியாக்குவதற்கு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்களுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பால் தடையேற்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதம் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர் மக்களின் அடிப்படை விடயங்களுக்காக  வரி நிவாரணத்தைப் பெற்றுக்கொடுத்தல், எரிபொருள் விலையைக் குறைத்தல் உள்ளிட்ட சகல வாழ்வாதார செலவீனங்களையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதென பதிவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .