Editorial / 2023 டிசெம்பர் 10 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய திருமணமான பெண், வாவிக்குச் சென்று குளித்துக்கொண்டிருந்த போது, அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபரை குற்றவாளியாக இனங்கண்ட மேல் நீதிமன்றம் அவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அம்பாறையில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் திருமணமான பெண்ணே,அன்றையதினம் கடமை முடிந்து நீராடிக்கொண்டிருந்த போது, சந்தேகநபர் இந்தக் குற்றத்தை புரிந்துள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை குற்றவாளியாக இனங்கண்ட அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி நலிந்த ஹேவாவசம், குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அதற்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. அதனை செலுத்த தவறினால், 3 மாதங்கள் ஒரு தளர்வான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 150,000 ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் செலுத்த தவறின் ஒரு வருடம் ஒரு தளர்வான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது,
தண்டப்பணம் மற்றும் நட்டஈடு செலுத்தாவிடின் சிறைத்தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்கவேண்டுமென வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 minute ago
23 minute ago
31 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
23 minute ago
31 minute ago
32 minute ago