2025 மே 21, புதன்கிழமை

”நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை”

Simrith   / 2025 மார்ச் 05 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற அசுத்தமான தேங்காய் எண்ணெய் உள்ளூர் சந்தையில் நுழைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

"சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயைப் பெற்று உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வதில் இறக்குமதியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்" என்று பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கூறினார்.

"சில இறக்குமதி நிறுவனங்கள் கணிசமான வருவாய் ஈட்டிய பின்னர் 11 மாதங்களில் செயல்படாமல் போய்விட்டன" என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்படும் என்றும், மோசடிகளைத் தடுக்க வலுவான விதிகள் மற்றும் விதிமுறைகள் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .