2025 ஜூலை 05, சனிக்கிழமை

நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்

Editorial   / 2018 டிசெம்பர் 04 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று தொடக்கம் சுற்றிவளைப்பு மற்றும் களப் பணிகளிலிருந்து விலகியிருக்க அகில இலங்கை நுகர்வோர் அதிகார சபையின் விசாரணைப் பிரிவு சங்கம் தீர்மானித்துள்ளது.

கேகாலை மாவட்டத்தில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக சென்ற நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் மீது, வர்த்தகர்கள் சிலர் தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக, இலங்கை நுகர்வோர் அதிகார சபையின் விசாரணைப் பிரிவு சங்கத்தின் செயலாளர் லங்கா திக்கும்பர தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த அதிகாரியொருவர் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய வர்த்தக நிறுவனமொன்றின் உரிமையாளரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து, இன்றிலிருந்து சுற்றிவளைப்பு மற்றும் களப்பணிகளிலிருந்து விலகியிருக்க அகில இலங்கை நுகர்வோர் அதிகார சபையின் விசாரணைப் பிரிவு சங்கம் தீர்மானித்துள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .