2025 ஜூலை 19, சனிக்கிழமை

நுவரெலியாவில் அரச வெசாக் விழா

J.A. George   / 2025 ஏப்ரல் 29 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025 ஆம் ஆண்டு 2569 ஆவது ஸ்ரீ பௌத்த வருடத்தின் வெசாக் மகோற்சவத்தை நுவரெலியாவில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்துடன், 2025 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை வெசாக் வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 பௌத்த பிக்குமார்கள் மற்றும் ஒட்டுமொத்த புத்தசாசனப் பேரவையின் ஆலோசனையின் பிரகாரம் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு, பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் பௌத்த விவகாரங்கள் திணைக்களமும் இணைந்து நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில் நடாத்த தீர்மானித்துள்ளது.  

இவ்வாண்டு அரச வெசாக் மகோற்சவம் நற்குணங்கள் கொண்ட உன்னத நண்பர்களுடன் பழகுவோம்('ஹஜெத மித்தே கல்யாண - ஹஜெத புரிசுத்தமே') எனும் தொனிப்பெருளின்கீழ் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் பல்வேறு பௌத்த மத நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கமைத்து நடைமுறைப்படுத்துவதற்கும்   அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X