2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நெல் கொள்வனவில் வெற்றி

ஆர்.மகேஸ்வரி   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019,2020ஆம் ஆண்டுகளுக்குரிய நெல் கொள்வனவானது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறதெனத் தெரிவித்த தகவல் மற்றும் தொடர்பாடல், தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் லக்‌ஷமன் யாப்பா அபேவர்தன, தற்போது காய்ந்த நெல் கிலோகிராம் ஒன்றின் விலை 50 ரூபாயாகவும் ஈர நெல் கிலோகிராம் ஒன்றுக்கு 44 ரூபாய் என  நிரந்தர விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள தென்றார்.

​இன்று (11) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ​மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து  தெரிவித்த அவர்,

அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்துக்கு நெல் விற்பனை சபை, பிரதேச ​செயலாளர்களுடன் இராணுவத்தின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .