Freelancer / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கல், குழந்தைகள் நல வைத்தியர்கள் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் வைத்தியசாலை வளாகங்களுக்குள் நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், இன்று (13) தெரிவித்துள்ளது.
சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பான குழுவின் முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டொக்டர் நலிந்த ஹேரத் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஆரம்பிப்பதற்கும் அதன் பரிந்துரைகளை சமர்ப்பிக்கவும் குழு நியமிக்கப்பட்டது.
சுகாதார அதிகாரிகளுடனான நீண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த குழுவுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமை தாங்கினார்.
12 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முக்கியமான கருவியாக குழுவின் பரிந்துரை இருக்கும்.
நாட்பட்ட நோய்கள் உள்ள சிறுவர்களுக்கும் 15 வயதுக்கு மேற்பட்ட சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
12 முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்தக் குழு விவாதித்தது என்று டாக்டர் ஹேரத் கூறினார்.
எங்கள் சுகாதார அமைப்பு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இந்த தடுப்பூசி வெளியீட்டைத் தொடங்கும் திறனைக் கொண்டுள்ளது.
நமது நாட்டில் பல போதனா வைத்தியசாலைகள், மாகாண பொது வைத்தியசாலைகள் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொது வை்தியசாலைகள் உள்ளன.
பெரும்பாலான மாவட்டங்களில் மூன்று அல்லது நான்கு தள வைத்தியசாலைகள் உள்ளதுடன், ஒரே நேரத்தில் தடுப்பூசியைத் தொடங்கவுள்ளன.
குழந்தைநல வைத்தியர்கள் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்கள் நாட்டின் பெரும்பாலான வைத்தியசாலைகளில் பரவியுள்ளனர்.
எனவே, அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் இந்த தடுப்பூசியை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு எங்களிடம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago