Freelancer / 2021 ஓகஸ்ட் 08 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 94 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
69 ஆண்களும் 25 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 71 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 22 பேர் மரணித்துள்ளதுடன் 30 வயதுக்குக் கீழ் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 5,111 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் மேலும் 2,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 328,273 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,563 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 293,357 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 30,956 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
23 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
48 minute ago