2025 மே 21, புதன்கிழமை

நொச்சிக்குளத்தில் சகோதரர்கள் இருவர் கொலை

Freelancer   / 2022 ஜூன் 11 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொசேரியன் லெம்பட்

மன்னார் –  நொச்சிக்குளம் பகுதியில் சகோதரர்கள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 16 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும், சந்தேக நபர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இருவரின் சடலங்கள் இன்று சனிக்கிழமை (11)  காலை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு வலு பெற்றதையடுத்து, நேற்று  (10)  காலை  கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், 33 மற்றும் 42 வயதான சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

உயிலங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .