Nirosh / 2021 மார்ச் 13 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சதீஸ்)
நோர்வூட் பிரதேசசபையின் உபதவிசாளர் தங்கராஜ் கிஸோகுமார், அவரது தாயார், உள்ளிட்ட மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொதுசுகாதார வைத்திய அதிகாரி வை.பி.எல்.பி.பஸ்நாயக்க தெரிவித்தார்.
நோர்வூட் பிரதேசசபையின் உபதவிசாளரின் மனைவிக்கு கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரோடு தொடர்பிலிருந்த 20 பேருக்கு மேற்கொள்ளப்பட்டப் பிசிஆர் பரிசோதனையிலேயே மேற்படி மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானவர்களை கொரோனா வைரஸுக்கான சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நாளை மறுதினம் (15) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
36 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
2 hours ago