2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தேசிய திட்டம்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களை வீட்டுத் தலைவிகளாகக் கொண்டுள்ள குடும்பங்களுக்கான தேசிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அராசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை (19) நடைபெற்ற, அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைத் தெரிவித்தார்.

சுகாதாரம், உளவியல், சமூக உதவி, வாழ்வாதார அபிவிருத்தி, உதவிச் சேவைகள் கட்டமைப்பு, பாதுகாப்பு, சமூக அரவணைப்பு மற்றும் தேசிய மட்டத்தில் கொள்கைகளை வகுத்தல் என்பதுடன்  விழிப்புணர்வூட்டல் ஆகிய துறைகளின் கீழ் இந்தச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கே  அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .