2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பெண்கள் பின் செல்ல பாகங்களை பிரித்தோர் கைது

Gavitha   / 2015 நவம்பர் 09 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு வருடங்களாக மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மூவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

திருடும் மோட்டார் சைக்கிள்பாகங்களை கழற்றும் இவர்கள், எஞ்சின், உள்ளிட்ட முக்கியமான பாகங்களைத் தவிர மற்றைய அனைத்துப் பாகங்களையும்  மாற்றி, பாணந்துறைப் பகுதியில் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுள் பாடசாலை அதிபரின் மகனொருவரும் உள்ளடங்குவதாக,பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரையிலும், 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் இவர்களால் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மோட்டார் சைக்கிளில் இருந்து அகற்றப்பட்ட பாகங்கள் ஆற்றில் எறியப்பட்டதாகவும் அவை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருடி விற்பனை செய்யும் பணத்தில் இவர்கள், பெண்களுடன் சுகபோகங்களை அனுபவித்து வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X