2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பிணைமுறி மோசடி; ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பமானது

Kogilavani   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில், விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை, நேற்று (01) ஆரம்பமானது.  

பிணைமுறி செயற்பாடுகள் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்றிருந்தால், அதில் முறைக்கேடுகள் இடம்பெற்றிருக்குமாயின், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் யார் என்று கண்டறிந்து, அவ்வாணைக்குழு மூன்று மாதங்களுக்குள் இறுதி அறிக்கையை, ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.   

உயர்நீதிமன்ற நீதியரசர்களான கே.டி.சித்ரசிறி, பிரசன்ன சுஜீவ ஜயவர்தன மற்றும் ஓய்வு பெற்ற பிரதி கணக்காள கந்தசாமி வேலுப்பிள்ளை ஆகிய, மூவரைக் கொண்ட இந்த ஆணைக்குழு, பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில், தன்னுடைய விசாரணைகளை நேற்று(01) ஆரம்பித்தது. இந்த விசாரணைகள், மார்ச் மாதம் 31ஆம் திகதி நிறைவடையும்.   

பிணைமுறிகள் வெளியிடுவதற்கான தேசிய தேவை இருந்ததா என்ற எண்ணத்தில் தான் இருப்பதாகவும் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என, பலரும் வலியுறுத்த உள்ளமையாலும், இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துரைப்பதே, தன்னுடைய எதிர்ப்பார்ப்பாகும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விடுத்துள்ள நிபந்தனைகள் மற்றும் ஆலோசனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X