2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பிணைமுறி விவகாரம்: ‘தண்டனைகள் பரிந்துரைக்கப்படும்’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 03 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்

“மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூவரைக்கொண்ட ஆணைக்குழு, குற்றவாளிகளுக்கு வழங்க வேண்டிய தண்டனைகளையும் பரிந்துரைக்கும்” என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த ஊடகவியாலாளர் மாநாடு, கட்சியின் தலைமைக் காரியாலயத்தில், நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,  

“பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு, தக்க தண்டனை வழங்குவதற்கும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, யார் அந்தக் குற்றவாளிகள் என்பதை வெளிப்படுத்துவதற்குமே, இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இதற்காக, குறித்த ஆணைக்குழுவுக்கு மூன்று மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  

கடந்த 27ஆம் திகதி நியமிக்கப்பட்ட மூன்று பேரடங்கிய இந்தக் குழு, 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல், 2016ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற திறைசேரி வழங்கல்கள் குறித்து ஆராயும்.  

இதேவேளை, பிணைமுறி விவகாரம் பற்றிய அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக்குழு (கோப்) விடயத்தில், கணக்காய்வாளர் நாயகம், சுதந்திரமாகச் செயற்பட்டுள்ளார். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், கணக்காய்வாளர் நாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அத்துடன், கண்காய்வாளர் நாயகத்தை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நான் முன்னெடுப்பேன்” என்றும் அவர் மேலும் கூறினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X