2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பாதீட்டுக்கு எதிராக வழக்கு

Princiya Dixci   / 2016 நவம்பர் 14 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கு (பாதீடு) எதிராக, வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி அறிவித்துள்ளது.  

மத்திய வங்கியின் ஊடாக செய்யப்படவேண்டிய நிதித் தீர்வகம் என்ற செயற்பாட்டை, தனியார்ஊடாக செயற்படுத்துவதற்கு இந்தத் திட்டத்தின் ஊடாக முன்மொழியப்பட்டுள்ளது. இது நிதித்தீர்வகச் சட்டத்தை மீறுகின்ற செயற்பாடாகும்.

ஆகையால், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உதவியை நாடித் தீர்வை பெற்றுக்கொள்ளவிருப்பதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொடுக்கல் மற்றும் வாங்கல் செயற்பாட்டின் ஊடாக நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியிலும் மேற்கொள்ளப்படுகின்ற கணக்கு வழக்கை செயற்படுத்துவதற்கான முழுமையான அதிகாரம் இலங்கை மத்திய வங்கிக்கே இருக்கின்றது.  

எனினும், இந்த செயற்பாட்டை தனியார் நிறுவனத்தின் ஊடாக செயற்படுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாக, 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்து எதிராக நீதிமன்றத்துக்கு செல்லவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .