2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

புதிய நீதிமன்றங்களை அமைக்க அனுமதி

Kogilavani   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய நீதிமன்றக் கட்டடங்களை நிர்மாணிப்பது தொடர்பில், நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.   

நீதிமன்றங்களுக்காக உள்ள கட்டடங்கள் மிகப் பழமையானவையாக இருத்தல், சனத்தொகையின் அதிகரிப்புக்கு ஏற்ப வழக்குகளின் எண்ணிக்கைகளின்  அதிகரிப்பு, நீதிமன்றக் கட்டடங்களின் இடவசதிகள் போதுமானதாக இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களினால், புதிய நீதிமன்றக் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான தேவை எழுந்துள்ளது.   

அதனடிப்படையில், கம்பளை, ருவன்வெல்ல, மாங்குளம், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை போன்ற பிரதேசங்களில் காணப்படுகின்ற நீதிமன்றக் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு, முன்னுரிமை பெற்றுக்கொடுத்து, புதிய நீதிமன்றத் கட்டடங்களை நிர்மாணிப்பது தொடர்பில், இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X