2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பாதாள உலக நடவடிக்கைகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை

Gavitha   / 2016 மார்ச் 08 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தர்ஷன சஞ்சீவ

பாதாள உலக குற்றவாளிகளுக்கு எதிராக, பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ஜயநாத் ஜயவீர கூறினார்.

தேவையானபோது பொலிஸ், இராணுவ உதவியைக் கோர வேண்டுமென அவர் கூறினார்.

நாரஹேன்பிட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மற்றும் பாதுகாப்புபடைகளிடம், பாதாள உலக நடவடிக்கைகளை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறியதாக ஜனாதிபதி கூறினார்.

பொலிஸ்மா அதிபர், தெற்கு மற்றும் மேற்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுடனும், அண்மைக்கால பாதாள கோஷ்டிச் செயற்பாடுகள் பற்றி, தான் பேசியுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

கடந்த வாரம் நடந்த பல சம்பவங்களால், பாதாள உலக கோஷ்டியினரும் அப்பாவி மக்களும் கொல்லப்பட்டும் காயப்பட்டும் உள்ளனர். பொலிஸ் திணைக்களம், கடுமையான குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் மோசடிகள் என்பவற்றை ஒழிப்பதற்கும் பல திட்டங்களை ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கைகளை, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நெறிப்படுத்துவார்.

தேவையான போது விசேட நடவடிக்கைகளுக்கு உதவவென, விசேட அதிரடிப்படை முகாம்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அணி, எப்போதும் தயார் நிலையில் இருக்கும்.

மேல் மாகாணத்தில் கடும் குற்றச்செயல்களை ஒழிக்க பிரதேச அமுலாக்கல் அணியும் விசேட விரைவு வீதி மறிப்புத் தொகுதியும் பயன்படுத்தப்படும் என பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .