2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பூமியதிர்ச்சியால் சபையில் சிரிப்பொலி

Kogilavani   / 2016 நவம்பர் 11 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து, சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் கலந்து உரையாற்றிய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சிற்சில சொற்களை உச்சரிப்பதற்குச் சிரமப்பட்டமையாலும், சில சொற்களைத் தவறாக உச்சரித்தமையாலும் சபையில் சிரிப்பொலி எழுந்தது.   

ஆங்கிலத்தில் உரையாற்றும் போது, எதிரணி உறுப்பினர்கள் மிகவும் அவதானமாகச் செவி சாய்த்து, ‘பூகம்பாவ’ (பூதியதிர்ச்சி) என்று கூற, அவையிலிருந்த ஆளும் எதிரணியினர் ‘கெக்’ என்று சிரித்து விட்டனர்.   

இதற்கிடையே ஒன்றிணைந்த எதிரணியினர், 2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட யோசனைகள் அடங்கிய புத்தகத்தைக் கோரி நின்றனர்.   

அதன்போது, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, “மஹிந்தவின் காலத்தில் இவ்வாறு கேட்டீர்களா?” என, உரத்தக் குரலில் கேட்டுவிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .