2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பியர் அருந்திய மாணவிகள் இடைநீக்கம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்றும் மாணவிகள், வகுப்பறைக்குள் பியர் அருந்திவிட்டு, மோசமான முறையில் நடந்துக்கொண்டமையால், பாடசாலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தென் மாகாண கல்வித்திணைக்களத்தின் பாடசாலை ஒழுக்காற்றுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தை பாடசாலையின் அதிபர் மறைப்பதற்கு முயற்சி செய்ததாகவும் எனினும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்களால், குறித்த பிரிவுக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, சோதனையொன்றை நடத்திய ஒழுக்காற்று பிரிவு, தவறு செய்த மாணவிகள் தொடர்பில் கண்டறிந்தது.

11ஆம் தரத்தில் கல்விக்கற்கும் குறித்த மாணவிகள், 13 பியர் டின்களை பாடசாலைக்கு கொண்டுவந்து, அவற்றை வகுப்பறையில் வைத்து அருந்தியுள்;ளனர். இதன்போது, மாணவியொருவரது கையிலிருந்த பியர் டின், கைதவறி கீழே விழவே தரை முழுவதும் பியர் கொட்டியுள்ளது.

இதன்போது, அங்கு வந்த ஆசிரியர், மாணவிகள் பியர் அருந்தியிருந்தமையை அறிந்து இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார் என்று தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .