2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பிரிகேடியரை கைதுசெய்யக்கோரி உண்ணாவிரதம்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னும் சொற்ப நேரத்தில் நாட்டுக்கு திரும்பவிருக்கின்ற பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தனவை கைதுசெய்யுமாறு கோரி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பிரிவினர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரத்துபஸ்வல தண்ணீர் பிரச்சினை தொடர்பில் வெலிவேரியவில் பொதுமக்கள் நிராயுதபாணிகளாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளுமாறு பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தனவே உத்தரவிட்டார் என்றும் அந்த போராட்டத்தில் குதித்துள்ளவர்கள் சுட்டிக்காட்டினர்.

பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன, துருக்கி தூதுவராலயத்தில் கிடைத்த பதவியை ஏற்றுக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .