2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பெர்மிட் விவகாரம்: ஐ.தே.க எதிர்ப்பு

Gavitha   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொழில்வாண்மையினருக்கும் வழங்கப்பட்டு வந்த இறக்குமதித் தீர்வையில்லாத வாகன அனுமதிப் பத்திரத்தை விலக்கிக் கொள்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

வரவு- செலவுத்திட்ட முன்மொழிவுகளையும் வேறு அரசியல் பிரச்சினைகளையும் பற்றி கலந்துரையாடுவதற்காக, ஐக்கிய தேசியக் கட்சி தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பெருந்தோட்டம் சுற்றுலா விடுதியொன்றில் பயிற்சிப்பட்டறையொன்றை நடத்தியது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, வரவு- செலவுத்திட்டத்தை எம்.பிக்களுக்கு விளக்கினார்.

இவ்வனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம், பெருமளவு வரி வருமானத்தை இழக்க நேரிடுகிறது.

வாண்மையாளர்களுக்கு வழங்கும் தீர்வையற்ற வாகனங்களை, வாகன இறக்குமதியாளர்கள் கொள்வனவு செய்வதால், நியாயமில்லாத நன்மைகளைப் பெறுகின்றனர்.

எனவே, பணநன்கொடை வழங்குவதே நல்லது என அவர் கூறினார்.

நெல் பயிரிடுவோருக்கு காசு வவுச்சர்களை வழங்குவதற்குப் பதிலாக, பசளை மானியத்தைத் தொடர வேண்டுமென எம்.பிக்கள் கோரினர்.

அதே சமயம், 2016ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இரண்டு பிரதான கட்சிகளினதும் புதிய முன்மொழிவுகளைச் சேர்ப்பதற்கான முன்நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X