2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பாலித்தவின் மகனுக்குப் பிணை

George   / 2016 ஒக்டோபர் 25 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனமடுவ நீதவான் ஜயந்தி வி​ஜேயதுங்க,  தலா 15 ஆயிரம்  ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் இவர்களை விடுவித்துள்ளார்.

குறித்த வழக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 05ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில் பாலித ரங்கே பண்டாரவின் மகன்  மற்றும் வாகன சாரதி ஆகியோர்,  கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

நேற்று இரவு 8.00 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில், 49 வயதுடைய நபர்  உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .