2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

போலி தொல்பொருட்களை விற்க முயன்றவர்கள் கைது

Gavitha   / 2016 நவம்பர் 05 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதையல் தோண்டும் போது கிடைக்கப்பெற்ற தொல்பொருள் என்று கூறி, போலியான தொல்பொருட்களை விற்பனை செய்வதற்கு முயற்சித்த 3 பேரை, அனுராதபுரம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஹொரவபொத்தான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டள்ளனர்.

தொல்பொருட்கள் என்று கூறப்பட்ட பெரிய பித்தளை விளக்குகள், மற்றுமொரு விளக்கு, தூள் கற்களால் உருவாக்கப்பட்டிருந்த வௌ;வேறு அளவுகளைக் கொண்ட பேழைகளும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தது.

குறித்த பகுதியிலுள்ள மிகப்பெரிய வர்த்தகரொருவர், குறித்த தொல்பொருட்களை 1 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கு இணங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த சந்தேக நபர்களிடமிருந்து தொல்பொருட்கள் என்று கூறப்படும் பொருட்களை தயாரிப்பதற்காக பயன்படுத்திய, தூளாக்கப்பட்ட கற்கள், பசை, பித்தளை, அச்சுக்கள் மற்றும் கருவிகள் என்று பலவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .