2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் சகலரினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வடமாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சரத் குமாரவினால், இந்த விசேட பொலிஸ் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாகாணத்தில் உள்ள சகல பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், தொகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோரின் விடுமுறைகள் மற்றும் ஒருநாள் ஓய்வு ஆகியனவே, இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளன. 

அவசரத் தேவை நிமித்தம் விடுமுறையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், மாகாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர்களைத் தனியாகச் சந்தித்து, விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கையை எடுக்கலாம் என்றும் அவ்வறித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .