2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸார் தேடும் தேரர், திங்கட்கிழமை சரணடைவாராம்?

George   / 2016 ஜனவரி 30 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோமாகம நீதிமன்றத்தின் முன்னால் கலகம் விளைவிக்கும் வகையில் பிரசன்னமாகியிருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் திங்கட்கிழமை காலை, பொலிஸாரிடம் சரணடையவுள்ளதாக வண.மாகல்கந்த சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

சகோதர மொழி வானொலிக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்நாட்களில் சமய கடமைகள் சில இருப்பதன் காரணமாக திங்கட்கிழமை பொலிஸாரிடம் சரணடைவதாக அவர் கூறியுள்ளார்.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, குழப்பம் விளைவிக்கும் வகையில், நீதிமன்றத்துக்கு முன்னால் குறித்த தேரர் உட்பட சிலர் குழுமியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில், வண.மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் படல்கும்புர  ஆரிய சாந்த தேரர் ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையிலேயே, திங்கட்கிழமை காலை தான் சரணடைவதாக தேரர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X