2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பிள்ளைகளுடன் தந்தை உண்ணாவிரதம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா விசா ஊடாக டுபாய் நாட்டுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்ற தனது மனைவியை மீட்டுத தருமாறு கோரிக்கை விடுத்து தனது இரு பிள்ளைகளுடன் நபரொருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கலேவல மீகஹயா பிரதேசத்தைச் சேரந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

தேவகுவ, ஹினுக்கல பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவரின் வீட்டுக்கு முன்னால் அமர்ந்து அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கலேவல பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றினால் சுற்றுலா விசாவில் அந்தப் பெண் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதாக பெண்ணின் கணவர் கூறியுள்ளார்.

தனது மனைவியை மீண்டும் நாட்டுக்கு வரவழைத்து தருமாறு வேண்டியே அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .