S.Renuka / 2025 டிசெம்பர் 01 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை-பசறை வீதி இன்று திங்கட்கிழமை (01) அன்று ஒரு வழிப்பாதையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பதுளை மாவட்ட நிர்வாக பொறியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையால், பதுளை-பசறை வீதியின் பல இடங்கள் மண்சரிவுகளால் தடைபட்டுள்ளன.
அத்தே கனுவா பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக கடுமையாக சேதமடைந்த வீதி சீரமைக்கப்பட்டுள்ளதுடன், இலகுரக வாகனங்கள் மட்டுமே ஒற்றைப்பாதையில் பயணிக்க தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
வீதியின் பாதுகாப்பின்மை காரணமாக வாகன ஓட்டிகள் வீதிக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பதுளை மாவட்ட நிர்வாக பொறியாளர் கேட்டுக்கொள்கிறார்.
5 minute ago
8 minute ago
11 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
11 minute ago
1 hours ago