J.A. George / 2021 மார்ச் 21 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ஆம் கட்டை மெத்தக்கடை பகுதியில் நேற்று (20) காலை இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பஸ்ஸுக்கு எதிரே வந்த குறித்த டிப்பர் வாகனத்தைத் தாண்டிச் செல்லுகையிலேயே பஸ் பள்ளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியமை சி.சி.ரி.வி காட்சியில் பதிவாகியிருந்தது.
இந்த விபத்தையடுத்து, டிப்பர் வாகனத்தின் சாரதி தப்பியோடிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
குறித்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30க்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இதில் மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago