Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 24 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
. துஷித குமார சில்வா
இலங்கையிலுள்ள சகல மீன்பிடித் துறைமுகங்களையும், பிளாஸ்டிக், பொலித்தீன் போன்ற கழிவுகளற்ற, பசுமையான துறைமுகங்களாக அபிவிருத்திச் செய்யும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, மீன்பிடி, நீரியள்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்தார்.
நேற்று (23), பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில், கழிவகற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மீன்பிடித் துறைமுகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் காணப்படும் பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப் பொருள்களை அகற்றி, மீன்பிடித் துறைமுகங்களைச் சிறந்த துறைமுகங்களாக மாற்றும் இந்த வேலைத்திட்டமானது, நீண்ட நாள்களாகத் திட்டமிடப்பட்டு வந்ததாகவும் இதற்கமைய, இலங்கையிலுள்ள மீன்பிடித் துறைமுகங்களை, பசுமைத் துறைமுக வலயங்களாக அபிவிருத்திச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள 22 துறைமுகங்களிலிருந்தும், நாளாந்தம் 5 ஆயிரம் மீன்பிடிப் படகுகள், மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குச் செல்கின்றன. இவ்வாறு செல்லும் படகுகளினூடாகக் கொண்டுசெல்லப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள், கடலில் வீசப்படுவதால், கடல் மாசு ஏற்படுவதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இதனைத் தவிர்ப்பதற்காகவே, இந்தப் பசுமைத் துறைமுக வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதென்றும் மேலும் தெரிவித்தார்.
45 minute ago
53 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
53 minute ago
58 minute ago
2 hours ago