Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
பட்டாசுகளை சிறிய ரக லொறியில் ஏற்றும்போது, இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளர்களில் 5 பெண்கள் உட்பட 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உராய்வு காரணமாக பட்டாசுகள் வெடித்துச் சிதறியுள்ளதாகவும் பட்டாசுகளை ஏற்றிக் கொண்டிருந்த 8 தொழிலாளிகள் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
படுகாயமடைந்தவர்கள் உடனடியாக சிவகாசி அரச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 1 தொழிலாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவரும் பின்னர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் படையினர், தீயை அணைத்து, 25 தொழிலாளர்களை மீட்டுள்ளனர்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago