2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பட்டாசு தொழிற்சாலையில் தீ: இருவர் பலி

Kanagaraj   / 2017 ஏப்ரல் 07 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு, கிம்புலாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில், இன்று (7) மாலை ஏற்பட்ட தீ விபத்தில், அந்த தொழிற்சாலையின் உரிமையாளரும் மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் கடும் தீக்காயங்களுக்கு உள்ளனான இவ்விருவரும், நீர்கொழும்பு வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளனர்.

உரிமையாளரான ரன்கம்புலிகே கிரிசாந்த நிரோசன (34 வயது), தரிந்து மதுசங்க (18 வயது) ஆகியோரே சம்பவத்தில் பலியானவர்களாவர்.

விசில்  ஒலி எழுப்பும் வான வெடிகளை தயாரிக்கும் பட்டாசு தொழிற்சாலையே வெடி விபத்து ஏற்பட்டு பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X