Freelancer / 2021 நவம்பர் 08 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வைபவங்களில் புகைப்படம் எடுக்கும் போது முகக் கவசத்தைக் கழற்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் புகைப்படக்காரர்களிடம் தாம் கோரிக்கை விடுப்பதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
வைபவங்களில் புகைப்படம் எடுப்பதற்காக முகக் கவசங்களைக் கழற்றுவதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர், இது அவ்வளவு நல்ல செயல் அல்ல என்று தெரிவித்த அவர், தண்ணீர் அல்லது உணவு அருந்துவது தவிர்ந்த எக்காரணத்துக்காகவும் முகக் கவசங்களை அகற்ற வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
திருமணங்கள் மற்றும் பிற விருந்துகள் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படுவதாகவும் இங்கே நாம் அதிகபட்ச வரம்பை அடையாமல் குறைந்தபட்ச எண்ணிக்கையைக் கொண்டு இந்தப் பணியை முடிக்க முடியுமா என்பது முக்கியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான ஒன்றுகூடல்கள் மூலம் மக்களின் சமூகத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது என்றும் இந்நோய் பரவாமல் தடுக்க நாம் முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
அனைத்து புகைப்படக்காரர்களும் புகைப்படம் எடுப்பதற்காக முகக்கவசங்களை அகற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கோரிய அவர், எக்காரணம் கொண்டும் சில நிமிடங்களுக்கேனும் முகக்கவசத்தை அகற்ற வேண்டாம் என்றார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நாளாந்தம் அறிக்கையிடப்படுவோர முற்றாக முடிவடையவில்லையென்றாலும், பாடசாலைகளை நடத்துவது அவசியமான செயலாக இருந்த காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மேலும் தெரிவித்தார்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025