Editorial / 2020 டிசெம்பர் 09 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் நடத்தப்படவிருக்கும் விருந்துபசாரத்துக்கு 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் மீதான இறுதி வாக்கெடுப்பு, 10ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தப்படவுள்ளது. அதன்பின்னர் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு இரவு விருந்துபசாரத்துக்கு 224 உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுடன், அவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த விருந்துபசாரத்துக்கான ஏற்பாடுகளை, நாடாளுமன்றத்தின் பணியாளர் குழு, தற்போது முன்னெடுத்து கொண்டிருக்கிறது என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
இந்த விருந்துபசார அலங்காரத்துக்கு நாட்டில் பிரசித்தமான பூக்கள் வர்த்தக நிறுவனத்தில் இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியான பூக்களும் ஏனைய உபகரணங்களும் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. அவர்களுடன் சேர்த்து, இந்த விருந்துபசாரத்தில் சுமார் 700 பேர் பங்கேற்கக் கூடுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட்-19 மிகவேகமாக நாட்டுக்குள் பரவியிருக்கும் இத்தருணத்தில்இ உற்சவமொன்றில் 50 க்கும் 100க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலே நபர்கள் பங்கேற்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அதிகரிகள் அறிவுறுத்தியுள்ளனர். எனினும்இ இந்த பட்ஜெட் விருந்துபசாரத்தில் மட்டும், 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
33 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
4 hours ago