Freelancer / 2026 ஏப்ரல் 14 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார அமைச்சின் விபத்துத் தடுப்புப் பிரிவினால் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தமது கண்காணிப்பு இன்றி சிறுவர்களைப் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், விபத்துக்கள் இல்லாத, பாதுகாப்பான புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அந்த பிரிவின் விசேட மருத்துவர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தேவையற்ற காயங்கள் மற்றும் சொத்துச் சேதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பட்டாசு கொளுத்தும் போதுஇ போதிய இடைவெளியைப் பேணுமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். (a)
6 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago