Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கார்களை இறக்குமதி செய்வதாக வாக்குறுதியளித்து, 4.3 மில்லியன் ரூபாயை மோசடி செய்த நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
தங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த சமன் குமார ஜயசிங்க என்ற நபர் தொடர்பான தகவல்களையே பொலிஸார் கோரியுள்ளதுடன், சந்தேகநபரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபரால் மோசடி செய்யப்பட்ட நபர் ஒருவர் செய்த முறைபாட்டுக்கு அமைய, சந்தேகநபரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடுபூராகவும் இவ்வாறான மோசடி வேலையில் ஈடுபட்டுள்ள குறித்த சந்தேகநபர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 011-2679593, 0112-673571, 0112-673954 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொள்ளுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
47 minute ago
2 hours ago
3 hours ago