2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

பண்டிகைக் காலத்தில் செய்யவேண்டியவை

Gavitha   / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. பண்டிகை காலங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முகமாக வழங்கப்பட்டுள்ள அறிவுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன பொதுமக்களை கேட்டுக்கொண்டார். 10 அம்ச வழிகாட்டுதலில், பண்டிகை காலங்களில் பயணத்தை குறைத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பொருள்களைக் கொள்வனவு செய்ய வெளியில் செல்வதை உறுதி செய்யுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அருகிலுள்ள கடையில் பொருள்களை வாங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். பண்டிகை காலங்களில் குடும்பம் அல்லது நண்பர்களின் விருந்துபசாரங்களில் இருந்து விலகி இருக்கவும், அத்தகைய உபசாரங்களை உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். பண்டிகை காலத்துக்காக உறவுகளை வாழ்த்தும்போது உடல் ரீதியான தொடர்பிலிருந்து விலகி இருக்கவும், எல்லா நேரங்களிலும் சமூக இடைவெளியை பராமரிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வயதானவர்களுக்கு வேகமாக நோய்த்தொற்றுக்கு ஏற்படும் என்பதால், தங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களை அதிக கூட்டம் உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்குமாறும் வெளிநபர்கள் வீட்டுக்குள் வருவதை மட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, பொது இடங்களில் சமூக இடைவெளியை பராமரிக்கத் தவறும் நபர்கள் குறித்து அறிவிக்க உரிமையுண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .