Editorial / 2020 டிசெம்பர் 09 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் மிகவேகமாக அதிகரித்துள்ளமையால், நத்தார் மற்றும் புதுவருட புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், பயணத்தடையை நீடிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
'தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்குமு் பயணத்தடையை பண்டிகை காலத்தில் கடுமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
'எவ்வாறாயினும், மக்கள் தாமாகவே பயணங்களை கட்டுப்படுத்திக்கொள்வது சிறந்தது, பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் அதிகளவில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பில் சுகாதார தரப்பினர் ஆராய்ந்து வருகின்றனர்' என்றார்.
அத்துடன், கொரோனா வைரஸ் பரவலை வெகு விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சின் செயலாளர் வழங்கியுள்ளார் என்றும் பதில் பணிப்பாளர் தெரிவித்தார்.
34 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
4 hours ago