2025 மே 17, சனிக்கிழமை

பதவிகளை மாற்றிக்கொண்ட பிரதியமைச்சர்கள்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அரசாங்கத்தின் பிரதியமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று புதன்கிழமை (09) சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட இரு பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை மாற்றிக்கொண்டுள்ளனர். 

சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிமல் லன்ஸாவும் உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சராக பதவியேற்றுக்கொண்ட அருந்திக்க பெர்னாண்டோவும் தங்களுடய அமைச்சுப் பதவிகளை மாற்றிக்கொண்டுள்ளனர். 

இதற்கமைவான, உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சராக நிமல் லன்ஸாவும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதியமைச்சராக அருந்திக பெர்னாண்டோவும் பணியாற்றவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .