Editorial / 2019 ஜூலை 18 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதவிகளை ராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்கும் தினம் தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானத்துக்கும் வரவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் இணைந்து பிரதமருடன் கலந்துரையாடி அதற்கான தினத்தினை தெரிவு செய்வார்கள் என, தான் எதிர்பார்ப்பதாகவும் முஜிபூர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மீண்டும் அமைச்சு பதவியை பொறுப்பேற்றுக்கொள்வது தொடர்பான ரிஷாட் பதியுதீனின் தனிப்பட்ட கருத்து தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் மேலும் கூறினார்.
எவ்வாறயினும், பதவிகளை ராஜினாமா செய்த அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் பதவிகளை பொறுப்பேற்பதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்பதாகவே முன்னதாக நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago