2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பதிவாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தல்

Freelancer   / 2022 செப்டெம்பர் 07 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் பிறப்பு, திருமண மற்றும் மரண சான்றிதழ்களுக்கு செல்லுபடிக்காலம் வரையறுக்கப்படவில்லை என  திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு, குடிவரவு குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட சான்றிதழ்களின் பிரதிகள் 6 மாதங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என குறிப்பிட்ட அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதாக திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

இதனால் பொதுமக்கள் அவதியுறுவதாகவும் தெளிவான சான்றிதழ் பிரதி இருக்குமாயின் மீண்டும் புதிய பிரதியை பெறவேண்டிய அவசியமில்லை என்றும் பதிவாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .