S.Renuka / 2026 பெப்ரவரி 22 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதிவு திருமணம் செய்ய இனி பெற்றோர் சம்மதம் கட்டாயம் என சட்டம் இயற்ற உள்ளதாக அங்கு ஆளும் பாஜக அரசு அறிவித்துள்ளது.
குஜராத் மாநில சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பேசிய ணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவி, திருமண பதிவு முறையை கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளார்.
காதல் திருமணம் என்ற பெயரில் அப்பாவி பெண்கள் ஏமாற்றப்படுவது, மத மாற்றம் செய்வது என கலாசார ஊடுருவல் நடந்து வருவதாக கூறிய அவர், இதனை தடுக்கும் பொருட்டு திருமண பதிவு முறையில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்தார்.
பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் அரசு காதல் திருமணங்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் கூறினார்.
இந்தத் திருத்தங்கள் குறித்து 30 நாட்களுக்குள் பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, ஒரு குழுவின் ஆய்வுக்குப் பிறகே இது இறுதிச் சட்டமாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்கள், தாங்கள் அந்த தகவலை பெற்றோருக்கு தெரிவித்துவிட்டோம் என்பதற்கான உறுதிமொழிப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
உதவிப் பதிவாளர் மணமக்களின் பெற்றோருக்குத் தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ தகவல் தெரிவிப்பார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago