2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பாம்பன் அருகே கஞ்சா எண்ணெய் பறிமுதல்

Editorial   / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

  எஸ்.ஆர்.லெம்பேட்

பாம்பன் அடுத்த முந்தல் முனை கடற்கரை பகுதியில்  இலங்கைக்கு கடத்துவதற்காக  படகில் பதுக்கி வைத்திருந்த 9.5  லீற்றர் கஞ்சா எண்ணெய்  பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படையினர் கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் பாம்பன் முந்தல் முனை குந்துகால், வேதாளை, மரைக்காயர்பட்டிணம், தனுஷ்கோடி உள்ளிட்ட கடற்கரைகளில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில்  படகுகளில் ஐஸ் போதைப்பொருள்,  கஞ்சா, கடல் குதிரை, கடல் அட்டை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை (19) அன்று அதிகாலை பாம்பன் அடுத்த முந்தல் முனை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு  படகில்  கஞ்சா எண்ணெய் கடத்த இருப்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இந்திய கடலோர காவல் படையினர் அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்தனர்.

அப்போது ஒரு   படகில்  மர்ம நபர்கள் நால்வர்  கஞ்சா எண்ணெய்    பொட்டலங்களை ஏற்றிக் கொண்டிருந்ததை கண்ட இந்திய கடலோர காவல் படையினர்  அவர்களை மடக்கி   பிடிக்க முயன்ற போது அவர்கள் நால்வரும் கடலில் குதித்து தப்பித்தனர்.

இதையடுத்து  படகையும் அதிலிருந்து 9.5 லீற்றர்  கஞ்சா எண்ணெய் யும்       பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படை வீரர்கள்  இந்திய கடலோர காவல்படை மண்டபம் முகாமுக்கு எடுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 முதற்கட்ட விசாரணையில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  படகில்  இருந்து கடலில் குளித்து தப்பித்தவர்கள் தங்கச்சி மடம் அந்தோனியார் புரம் பகுதியை சேர்ந்த நால்வர் என தெரிய வந்துள்ளது. 

தப்பியோடிய நால்வரையும் தீவிரமாக தேடி வருவதுடன் பறிமுதல் செய்யப்பட்ட  கஞ்சா எண்ணெய் யின் இந்திய மதிப்பு மதிப்பு  . 12 கோடி இருக்கும் என இந்திய கடற்படை தெரிவித்துள்ளனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட  கஞ்சா எண்ணெய் இந்திய மதிப்பு திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X