Editorial / 2019 ஜூலை 24 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாதாரண நபர்கள் பயங்கரவாதத்துடன் இணைதல், புதிய பயங்கரவாத குழுக்கள் உருவாகுவதைத் தடுக்கும் வகையிலான சட்டங்களை உருவாக்குவது காலத்தின் தேவையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக, புதிய சட்டங்களை உருவாக்குவது தொடர்பில், அமைச்சரவையில் நேற்றைய தினம் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்ட போதே, பிரதமரால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக கட்டுபடுத்தும் உத்தரவு, பயங்கரவாதத்தை மேம்படுத்தலை தடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் பயங்கரவாதம் தொடர்பில், விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள் குறித்து ஆராய்ந்து, அமைச்சரவையில் காரணங்களை முன்வைப்பதற்கு அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சரவை உபகுழுவானது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.
24 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago