2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்: த.தே.கூ

Gavitha   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிவரவிருக்கும் சர்வதேச விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டிய தேவையையும் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய  எம். ஏ. சுமந்திரன், பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் ஹுகோ சுவயருடன் நடந்த சந்திப்பிலேயே மேற்கண்டவாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

திங்கட்கிழமை(14) ஜெனிவாவில் இடம்பெற்ற இச்சந்திப்பு தொடர்பில் த.தே.கூ ஊடகப்பிரிவு தெரிவித்த விடயங்களாவன,
இலங்கையில் பொறுப்புகூறல் சம்பந்தமாக ஏற்பட்டுத்தப்படவிருக்கும் அனைத்துப் பொறிமுறைகளிலும் முழுமையான சர்வதேச ஈடுபாடு இருக்கவேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக் கூறியுள்ளார்.

அத்தோடு, வெளிவரவிருக்கும் சர்வதேச விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படடுத்த வேண்டிய தேவையையும் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இச்சந்திப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மனித உரிமை பேரவை அங்கத்துவ நாடுகள், வேறு அரசாங்கங்கள், இலங்கை அரசாங்கம் மற்றும் இவ்விடயத்தில் அக்கறையுள்ள அனைவரோடும் பொறுப்புகூறல் சம்பந்தமாக தொடர்ச்சியாக மேற்கொண்டிருக்கின்ற கலந்துரையாடல்களின் ஒரு பகுதியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .