2025 மே 07, புதன்கிழமை

பிரித்தானிய விசாவுக்கு விண்ணப்பிப்போருக்கு அதிர்ச்சி செய்தி

Freelancer   / 2025 மே 07 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவுக்கு தொழில் மற்றும் கல்வி விசாவுக்கு விண்ணப்பிப்போருக்கு  கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதா பிரித்தானிய உள்நாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக இந்த விடயத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. 

இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் தொழில் அல்லது கல்வி விசாவில் சட்டரீதியாக பிரித்தானியாவிற்குள் பிரவேசித்து, பின்னர் அரசியல் தஞ்சம் கோருகின்றனர். 

இதனால் பிரித்தானியாவின் வரி செலுத்துனர்களது நிதி வீணடிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. 

அதற்கு அமையவே தொழில் மற்றும் கல்வி வீசாவுக்கு விண்ணப்பிப்போர் தொடர்பாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X