2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

அம்பாறைக்கு பிரதமர் விஜயம்

R.Tharaniya   / 2025 நவம்பர் 03 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணங்களில் கல்வித்துறை தொடர்பான அவதானிப்பு சுற்றுப் பயணத்தின் போது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரும், நாட்டின் கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய ஞாயிற்றுக்கிழமை (02) அன்று அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

இதன் போது பிரதமருடன் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவரும் இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுளா ரத்நாயக்க உட்பட பிரமுகர் பலரும் கலந்து கொண்டனர்.

"புதிய கல்விச் சீர்திருத்தம் 2026 பற்றிய கல்வி சமூகத்திற்கு தெளிவூட்டல்" எனும் தொனிப்பொருளில் இரண்டு கட்டங்களாக நிகழ்வுகள் நடைபெற்றன.

நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற முதல் கட்ட நிகழ்வில், கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலயங்களில் உள்ள கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் நினைவாக பிரதமர் மரக் கன்று ஒன்றினையும் நட்டு வைத்தார். இந்நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய உரையாற்றியதோடு,ஆசிரியர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இதன் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய வுக்கு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

அம்பாறை டி.எஸ். சேனநாயக்க தேசிய பாடசாலையில்  இரண்டாம் கட்டமாக நடைபெற்ற நிகழ்வில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி வலயத்தின் கல்வி வலயப் பணிப்பாளர்கள், பிரதி கல்வி பணிப்பாளர் கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

எம்.எஸ்.எம்.ஸாகிர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X