Freelancer / 2021 ஓகஸ்ட் 14 , பி.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று யாரையும் பாதிக்கலாம். அவ்வாறு பாதிக்கப்படும் போது, சுகாதார ஊழியர்கள் எங்களைக் காப்பாற்ற தங்களது உயிரைப் பணயம் வைக்கின்றனர். அவர்களைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும் என்று கொழும்பிலுள்ள உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
தமது டுவிட்டர் பக்கத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்க சுகாதார ஊழியர்கள், நாள் முழுவதும் தொடர்ந்து வேலை செய்கின்றனர்.
அனைத்து பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை பின்பற்றி ஆரோக்கியமாக இருப்பதன் மூலம் நாங்கள் அவர்களை ஆதரிக்கலாம் என்றும் ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
நமது சுகாதார ஊழியர்களை பாதுகாப்பது நம்மைச் சார்ந்த பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
முகக் கவசம் அணிந்து சமூக இடை வெளியைப் பின்பற்றுவதுடன், நெருக்கடியான இடங்களை தவிர்த்து சமூகக் கலப்பில் ஈடுபட வேண்டாம் என்றும் கைகளைச் சுத்தப் படுத்துமாறும் ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago