Editorial / 2025 மார்ச் 02 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவனைத் தாக்கி அவரது காதில் காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் பாடசாலையின் அதிபரை இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹிங்குராக்கொடை பதில் நீதவான் நாலக மிஹிர பண்டார உத்தரவிட்டார். தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர் தொடர்பாக நீதித்துறை மருத்துவ அதிகாரி நடத்திய மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மெதிரிகிரிய பொலிஸாருக்கு உத்தரவிட்ட பதில் நீதவான், சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் மேலும் உத்தரவிட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் பொலன்னறுவை கவுடுலுவெவவைச் சேர்ந்த டி.ஜி. ரோஹித கமல் தர்மசேன ஆவார்
8 minute ago
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
07 May 2026